தென்காசி அருகே நாட்டு வெடிகுண்டு தயாரித்த 4 பேர் கைது

தென்காசி அருகே நாட்டு வெடிகுண்டு தயாரித்த 4 பேர் கைது. போலீசார் வழக்கு பதிவு.;

Update: 2024-04-01 04:46 GMT

கைது

தென்காசி மாவட்டம் வீரகேரளம் புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீராணம் சாலையில் சார்பு ஆய்வாளர் கௌசல்யா தலைமையிலான காவல் துறையினர் நேற்று வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது அதில் இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. இது தொடர்பாக வாகனத்தில் வந்த சுரேஷிடம் விசாரணை செய்ததில் சுரண்டையில் நாகராஜ் என்பவரிடமிருந்து வெடி மருந்துகள் வாங்கி 8 நாட்டு வெடிகுண்டுகளாக தயார் செய்து, அதில் இரண்டு குண்டுகளை மனோ சங்கர் என்பவரிடமும், ஒரு குண்டு கார்த்திக் என்பவரிடமும் கொடுத்து வைத்திருப்பதாக வும், மூன்று குண்டுகளை வீராணம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி வளாகத்திற்குள் சுரேஷ் மற்றும் கார்த்திக் சேர்ந்து வெடித்து பள்ளி சுவற்றை சேதப்படுத்தியதாகவும் கூறியுள்ளார். குற்றவாளி களை விரைந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப் பாளர் சுரேஷ் குமார் உத்தரவின் பேரில் வீராணம் மேட்டுப்பட்டி தெருவை சேர்ந்த நாகராஜா என்பவரின் மகன் சுரேஷ்(34), கிருஷ்ணசாமி என்பவரின் மகன் கார்த்திக்(25), சுரண்டை பாண்டியன் என்பவரின் மகன் மனோ சங்கர்(19) மற்றும் சுரண்டை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கணபதி என்பவர் மகன் நாகராஜா(35) ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News