சிவகங்கையில் 4 வழி சாலை பணிகள் துவக்கம்

சிவகங்கையில் இருவழி சாலையை 4 வழி சாலையாக அமைக்கும் பணிகளை அமைச்சர் பெரியகருப்பன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Update: 2023-12-29 08:22 GMT

சாலை விரிவாக்க பணிகள் துவக்கம் 

சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் இருவழி சாலையை 4 வழி சாலையாக அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் தலைமையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைத்து பேசுகையில், சிவகங்கை மாவட்டத்தில், சிவகங்கை பகுதியில் சஞ்சய் நகர் முதல் மலம்பட்டி வரையிலான பகுதியில் ரூ.78 கோடி மதிப்பீட்டில் மொத்தம் 11.05 கிலோ மீட்டர் தூரத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 2021-2022 ஆம் நிதியாண்டில் 291.625 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.471.75 கோடி மதிப்பீட்டிலான சாலை பணிகளும் மற்றும் 22 தரை மட்ட பாலங்களை ரூ. 12.13 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலமாக அமைத்திடும் பணியும், 2022-2023 ஆம் நிதியாண்டில் 146.608 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.165.06 கோடி மதிப்பீட்டிலான சாலை பணிகளும் மற்றும் 10 தரை மட்ட பாலங்களை ரூ. 9.95 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலமாக அமைத்திடும் பணியும் மற்றும் 2023-2024 ஆம் நிதியாண்டான நடப்பாண்டில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியாக இன்றைய தினம் தொடங்கப்பட்டுள்ள பணியும் , 2023-2024 ஆம் நிதியாண்டில் 43.22 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.47.90 கோடி மதிப்பீட்டிலான சாலை பணிகளும் மற்றும் 13 தரை மட்ட பாலங்களை ரூ. 21.10 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலமாக அமைத்திடும் பணியும் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதவிர நெடுஞ்சாலைத்துறையின் திட்டங்கள் அலகு மூலம் சிவகங்கை புறவழிச்சாலை அமைப்பதற்கென 7.60 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.109 கோடி மதிப்பீட்டிலான பணிகளும் கடந்த மாதம் தொடங்கப்பட்டு , நடைபெற்று வருகிறது. இதுபோன்று மாவட்டத்தின் வளர்ச்சிக்கும் தொழிற்சாலைகளின் பயன்பாட்டிற்கும் அடிப்படையாக அமைந்துள்ள சாலை போக்குவரத்திற்கு ஏற்றார்போல் மேற்கண்டவாறு பல்வேறு சாலைப்பணிகள் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது என பேசினார்

Tags:    

Similar News