40 லிட்டர் சாராய ஊறலுடன் வாலிபர் கைது

அதங்கோடு;

Update: 2025-06-13 12:59 GMT
குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே அதங்கோட்டில் சாராயம் காய்ச்சுவதாக களியக்காவிளை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது .போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பெனடிக்ட் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை சுற்றி வளைத்தனர். அப்போது ஒரு வீட்டில் இருந்து வாலிபர் ஒருவர் தப்பி ஓட முயற்சி செய்தார். அந்த வாலிபரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் அந்த வாலிபர் அதங்கோடு சத்திய நேசன் மகன் சர்ஜன் (47) என்றும் தனது வீட்டில் 40 லிட்டர் சாராய ஊறல் இருப்பதாக கூறியுள்ளார். போலீசார் 40 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்தனர். சர்ஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News