மானை வேட்டையாடிய இருவருக்கு 40 ஆயிரம் அபராதம்!
அணைக்கட்டு அருகே புள்ளிமானை வேட்டையாடி, இறைச்சியை பயன்படுத்தியவர்களிடம் ரூ. 40 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
அணைக்கட்டு அருகே உள்ள வரதலம்பட்டு பகுதியை சேர்ந்தவர்கள் நேதாஜி, ஞான பரகாஷ் ஆகியோர் அதே பகுதியில் விவசாயம் செய்து வருகின்றார்கள். இந்நிலையில் அப்பகுதியில் தண்ணீர் தேடி வந்த புள்ளி மானை வேட்டையாடி அதே பகுதியில் உள்ள மாந்தோட்டத்தில் சமைத்துகொண்டு இருப்பதாக ஒடுகத்தூர் வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் பேரில் விரைந்து சென்ற வனத்துறையினர் மான் கரியை சமைத்துக்கொண்டு இருந்ததை பார்த்து அங்கிருந்தவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். இதனையடுத்து மான் கரியை சமைத்துக் கொண்டு இருந்ததை பறிமுதல் செய்து அவர்களையும் அலுவலகத்திற்கு அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது வேறொருவர் மானை வேட்டையாடி கொண்டு வந்ததாகவும், அதை நாங்கள் விலை கொடுத்து வாங்கி சமைத்ததாக கூறியுள்ளன. இதனையடுத்து 2 பேருக்கு தலா ரூ. 20 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 40 ஆயிரம் என அபராதம் விதித்தனர்.