400 திருக்குறளையும் மனப்பாடமாக  ஆட்சியர் ஜெயசீலன் முன்னிலையில் ஒப்பித்து அனைவரையும் ஆச்சரிய படுத்தி உள்ளார். திருக்குறளை மனப்பாடமாக ஒப்புவித்த சிறுவனுக்கு பாராட்டுக்கள்

400 திருக்குறளையும் மனப்பாடமாக  ஆட்சியர் ஜெயசீலன் முன்னிலையில் ஒப்பித்து அனைவரையும் ஆச்சரிய படுத்தி உள்ளார். திருக்குறளை மனப்பாடமாக ஒப்புவித்த சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன*.

Update: 2025-01-01 11:21 GMT
விருதுநகரில் அனைத்து வகைப் பள்ளி மாணவர்களுக்கான திருக்குறள் முற்றோதல் செய்யும் நிகழ்ச்சியில் 4 வயது யூகேஜி மாணவன் 400 திருக்குறளையும் மனப்பாடமாக  ஆட்சியர் ஜெயசீலன் முன்னிலையில் ஒப்பித்து அனைவரையும் ஆச்சரிய படுத்தி உள்ளார். திருக்குறளை மனப்பாடமாக ஒப்புவித்த சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன*. விருதுநகர் தனியார் பள்ளியில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகைப் பள்ளி மாணவர்களுக்கான திருக்குறள் முற்றோதல் செய்யும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. 1-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக், சி.பி.எஸ்.இ பள்ளிகளில் படிக்கும் அனைத்து வகைப் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 150-ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் சிவகாசி தனியார் பள்ளியில் யுகேஜி பயிலும் 4 வயது சிறுவன் ஷாருக்கான் மனப்பாடமாக 400 திருக்குறள்களையும் ஆட்சியர் ஜெயசீலன் முன்பாக ஒப்புவித்து அசத்தியுள்ளான். இந்நிகழ்ச்சியில், கலந்து கொண்ட மாணவர்கள் திருக்குறளின் அதிகாரம் எண் 1 கடவுள் வாழ்த்து முதல் அதிகாரம் எண் 30 வாய்மை வரை, 300 திருக்குறளையும், வரிசையாக ஒப்புவித்தனர். திருக்குறள் ஒப்புவித்தல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள அனைத்து மாணவர்களையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒருநாள் சுற்றுலா அழைத்து செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News