ஆட்டோவில் கொண்டு சென்ற 405 சேலைகள் பறிமுதல் !
சேலம் நெத்திமேட்டில் ஆட்டோவில் கொண்டு சென்ற 405 சேலைகள் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-29 10:26 GMT
சேலைகள்
நாடாளுமன்ற தேர்தலையொட்டி பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று சேலம் நெத்திமேடு தண்ணீர் பந்தல் காளியம்மன் கோவில் அருகே வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக சென்ற ஆட்டோவில் நடத்திய சோதனையில், சுமார் 20-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் சுமார் 405 சேலைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.