43 இருசக்கர வாகனங்கள் பொது ஏலம் - ஒத்திவைப்பு

காவல்துறையால் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் பொது ஏலம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.;

Update: 2023-12-24 13:39 GMT

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்

காவல்துறையால் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் பொது ஏலம் ஒத்திஒத்திவைக்கப்பட்டுள்ளது இது குறித்து மது விலக்கு பிரிவு சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், திருச்சி மாவட்டத்தில், குற்ற வழக்குகளில் தொடர்புடைய வகையில் 43 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றை திருச்சி சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை மைதனத்தில், வருகிற 23 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு பொது ஏலத்தில் விட அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

Advertisement

இந்நிலையில் நிர்வாக காரணமாக பொது ஏலம் தற்சமயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வருகின்ற 27-ம் தேதி காலை 10.00 மணிக்கு சுப்ரமணியபுரத்திலுள்ள திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் விடப்படும் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செய்தி வெளியிட்டது உள்ளார்.

அன்றைய தினம் ஏலம் கோர விருப்பம் உள்ளவர்கள் முன்வைப்புத்தொகைதொகையாக இருசக்கர வாகனங்களுக்கு ரூ.2000 செலுத்தி, தனியாக சரக்கு மற்றும் சேவை வரியும் செலுத்த வேண்டும் எனவும் திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வரும் 27-ம் தேதிக்கு முன்னதாக வாகனங்களை பார்வையிட்டு ஏலத்தில் கலந்து கொள்ளலாம் என தெரிவித்து உள்ளார்

Tags:    

Similar News