துவாரகாபதி கடலில் 47 ஆமை குஞ்சுகள் விடப்பட்டன

வனத்துறை சார்பில் துவாரகாபதி கடலில் 47 ஆமை குஞ்சுகள் விடப்பட்டன.

Update: 2024-05-10 12:40 GMT

வனத்துறை சார்பில் துவாரகாபதி கடலில் 47 ஆமை குஞ்சுகள் விடப்பட்டன.


கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் கடல் ஆமைகள் வந்து முட்டை இட்டுச் செல்வது வழக்கமாக உள்ளது. அவ்வாறு ஆமைகள் இடும் முட்டைகளை அழியாமல் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் அவற்றை வனத்துறையினர் சேகரித்து ஆமை முட்டை பொரிப்பகத்தில் பாதுகாத்து, முட்டையில் இருந்து ஆமைக்குஞ்சுகள் வெளியே வந்ததும் அதை கடலில் விடுவது வழக்கம்.       இந்த நிலையில் கன்னியாகுமரி அருகே உள்ள துவாரகாபதி கடற்கரை பகுதியில் ஆமை குஞ்சுகளை  கடலில் விடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் துவாரகா பதி கடல் பகுதியில் உள்ள மாவட்ட வன அலுவலர், வன உயிர்நிலைக்காப்பாளர் பிரசாந்த் உத்தரவின் பேரில், வனச்சரக காப்பாளர் ரவீந்திரன், வனவர் பாலசந்தரிகா, வன காப்பாளர் ராஜு, இயற்கை ஆர்வலர் சுதாமதி ஆகியோர் இணைந்து 45 ஆமைக்குஞ்சுகளை கடலில் விட்டனர். இதில் கடல் ஆமை பாதுகாப்பின் முக்கியத்துவம் கொடுத்து விளக்கி கூறப்பட்டது.
Tags:    

Similar News