48 மதுபாட்டில்களுடன் ஒருவர் கைது

காப்புக்காட்டில்;

Update: 2025-05-23 03:04 GMT
விளாத்துறை அருகே காப்புக்காடு பகுதியில் அரசு அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்ற கிருஷ்ணராஜன் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.       அப்போது அவரிடமிருந்து 48 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இவற்றை அவர் அதிக விலைக்கு விற்பனை செய்ய வைத்திருந்தது தெரிய வந்தது. போலீசார் மது பாட்டில்களை பறிமுதல் செய்து, புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து, கிருஷ்ணராஜனை கைது செய்தனர்.

Similar News