புதுமைப்பெண் திட்டத்தில் 4,869 மாணவிகள் பயனடைந்துள்ளனர் - ஆட்சியர்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தில் 4,869 மாணவிகள் பயனடைந்துள்ளதாக கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-14 07:55 GMT

ஆட்சியர் வளர்மதி 

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:தமிழ்நாட்டினை அனைத்து துறைகளிலும் முன்னணி மாநிலமாக மாற்றிடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டு வரப்பட்ட புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்து மேற்படிப்பிற்கு சேர்ந்த 2 லட்சத்து 73 ஆயிரம் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் இந்த திட்டத்தில் 4,869 மாணவிகள் பயனடைந்துள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News