கிராம உதவியாளர்கள் மாநில சங்கத்தின் 48 வது மாநில பொதுக் கூட்டம்
கிராம உதவியாளர்கள் மாநில சங்கத்தின் 48 வது மாநில பொதுக் கூட்டம் நடைபெற்றது.;
By : King 24x7 Website
Update: 2023-10-29 08:10 GMT
ஆலோசனை கூட்டம்
பெரம்பலூர் மாவட்டம், சின்னாறு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் மாநில சங்கத்தின் 48-வது மாநில பொதுக்கூட்டம் மாநில தலைவர் மனோகரன் தலைமையில்அக்டோபர் 28ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட செயலாளர் பிரேம்குமார் வரவேற்புரையாற்றினார். மாநிலச் செயலாளர் மாணிக்கவேல்,மாநில சங்கத்தின் மகளிர் அணி செயலாளர் மலர்கொடி ஆகியோர் முன்னிலை வகித்த இக்கூட்டத்தில் தமிழ்நாட்டில் பணிபுரியும் அனைத்து கிராம உதவியாளர்களையும் பனிக்காலத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு பனி மூப்பு அடிப்படையில் வரையறுக்கப்பட்ட காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும், அரசு ஆணை 33 ரத்து செய்து கிராம உதவியாளர்கள் இறந்தால் கருணை அடிப்படையிலான பணி நியமனம் ஆணை வழங்க வேண்டும், மாற்றுத் திறனாளிகளாக உள்ள கிராம உதவியாளர்களுக்குநிறுத்தப்பட்ட மாற்றுத்திறனாளிக்கான ஊர்தி படையை உடனே வழங்க வேண்டும், CPS -ல் பணிபுரிந்து ஓய்வு பெற்ற கிராம உதவியாளர்களுக்கு ஓய்வுக்குப் பின் இறுதி தொகையை உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்பொதுக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றும் அரசு கிராம உதவியாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.