பருத்தி வார சந்தையில் ரூபாய் 5 லட்சம் வர்த்தகம்
கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி வார சந்தை நடைபெறும்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-08 05:22 GMT
பருத்தி வார சந்தையில் ரூபாய் 5 லட்சம் வர்த்தகம்
கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி வார சந்தை நடைபெறும். கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பஞ்சு மூட்டைகளை விற்பனைக்குக் கொண்டு வருகின்றனர். நேற்று நடந்த சந்தையில் எல்.ஆர்.ஏ., ரக பஞ்சு 295 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. எல்.ஆர்.ஏ., ரகம் குறைந்தபட்சம் 6,400 ரூபாய்க்கும், அதிகபட்சம் 6,810 ரூபாய்க்கும் விலை போனது. அதன்படி 65 விவசாயிகள் கொண்டுவந்த 295 பஞ்சு மூட்டைகள், 5 லட்சம் ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது.