கஞ்சா விற்ற 5 பேர் கைது
கன்னியாகுமரி மாவட்டம்,கோட்டார் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே கோட்டார் பகுதியில் உள்ள கொளத்தூர் பூங்கா அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நேற்று மாலை அந்த இடத்தில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது போலீசாரை கண்டதும் பூங்கா அருகே நின்று கொண்டிருந்த ஐந்து பேர் தப்பி ஓட முயற்சித்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
பின்னர் அவர்களை சோதனை செய்தபோது 50 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சாவை பர்முதல் செய்த போலீசார் அவர்களை கோட்டார் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் கோட்டார் புதுத்தெருவை சேர்ந்த முகமது தாரிக் (20 ), இடலாக்குடி பகுதியை சேர்ந்த ரிபாஸ் கான் (21), மாதவலாயம் மைதீன்புரத்தை சேர்ந்த முஜாஹித் (21), வேர்கிளம்பி பகுதி ஷாகுல் மற்றும் ரகு என்பது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து மூன்று பைக்குகளையும் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து இவர்கள் வங்கி கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு வீட்டிலும் வீடுகளின் சோதனை நடைபெற்றது. கைதானவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இவர்கள் இந்த கஞ்சா எங்கிருந்து கொண்டுவரப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. கைதானவர்களின் செல்போன் அழைப்புகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.