வாணியம்பாடி அருகே அடுத்தடுத்து 5 கடைகள் பூட்டை உடைத்து கொள்ளை
வாணியம்பாடி அருகே தொடர் திருட்டு!
Update: 2024-01-29 08:23 GMT
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே அடுத்தடுத்து 5 கடைகள் பூட்டை உடைத்து கொள்ளை திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி புதூர் அருகே உள்ள சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஒட்டி வணிக வளாகத்தில் 12 கடைகள் இயங்கி வருகிறது. அதில் நேற்று இரவு காம்ப்ளக்ஸ் உள்ளே புகுந்த மர்ம நபர் டைலர் கடை, சரக்கு வாகன விற்பனையகம், கெமிக்கல் நிறுவனம், பைனான்ஸ் ஆகிய அலுவலகம் என அடுத்தடுத்து 5 கடைகளின் பூட்டை உடைத்து ரூ 1 லட்சம் மதிப்பிலான பணம் உதிரி பாகங்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி நகர போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதே போல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இதே காம்ப்ளக்ஸ் பகுதியில் நள்ளிரவில் மர்ம நபர் அடுத்தடுத்து மூன்று கடைகளில் கொள்ளையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. பைபாஸ் சாலையில் உள்ள வணிக வளாகங்களில் அவ்வப்போது திருட்டு சம்பவம் நடைபெறுவது தொடர் கதையாகியுள்ளதால் வணிகர்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.