நாகை மாவட்ட அரசு ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டிடத்தில், நாகை அரசினர் தொழில் நுட்ப உயர்நிலைப்பள்ளியில், கடந்த 1976 -1979- ம் ஆண்டில் படித்த மாணவர்கள், 50 ஆண்டுகள் கழித்து சந்திக்கும் நெகிழ்ச்சியான நிகழ்ச்சி, நடைபெற்றது. இதில் படித்த மாணவர்கள் மின்சார வாரியம், இந்திய ராணுவம், நிலக்கரி சுரங்கத்துறை, போக்குவரத்து துறை, வேலைவாய்ப்பு துறை, அரசு தொழில் பயிற்சி நிலையம் மற்றும் சுய தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர்கள், சென்னை, கோவை, தஞ்சாவூர், மதுரை என பல்வேறு மாவட்டங்களிலும், பல்வேறு மாநிலங்களிலும், பல்வேறு நாடுகளிலும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். முன்னாள் மாணவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தங்களது பழைய சம்பவங்களை நினைவுகூர்ந்து கலந்துரையாடினர். அப்போது, தங்கள், குடும்பத்தை பற்றியும், தங்கள் பணிகளை பற்றியும் உரையாடிய அவர்கள் , ஒருவரை ஒருவர் கட்டிதழுவி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது, காண்போரை நெகிழ்ச்சி அடைய வைத்தது. மேலும், குழு புகைப்படம் எடுத்து, பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இந்த சந்திப்பு, தங்கள் வாழ்வில் மறக்க முடியாத நாளாக அமைந்துள்ளதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.