குமரி மாவட்டம் குலசேகரம் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பைக்குகள் திருட்டு போனது. இது குறித்து பைக்கின் உரிமையாளர்கள் குலசேகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சம்பவ தினம் பொன்மனை சந்திப்பில் வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த நபர் ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பி செல்ல முயன்றார். ஆனால் பைக் நிலை தடுமாறி அவர் கீழே விழுந்து காயம் அடைந்தார். அந்த நேரம் கண்காணிப்பில் இருந்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் திற்பரப்பு பகுதி சேர்ந்த பிரபல கொள்ளையன் ஜெகன் (39) என்பதும், அவர் கான்வென்ட் சந்திப்பு, பொன்மனை பகுதியில் பைக் திருடியதும் தெரிய வந்தது. இதை அடுத்து போலீசார் கூறுகையில்:- பிரபல திருடனனான ஜெகன் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது குலசேகரம், திருவட்டார், பேச்சிப்பாறை, கடையாலுமூடு, அருமனை காவல் நிலையங்களில் 50க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன. மூன்று முறை குண்டர் சட்டத்தின் கீழ் ஜெகன் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது சிறையில் இருந்து வெளியே வந்தவர் மீண்டும் திருட்டில் ஈடுபட்டுள்ளார். என போலீஸ் சார் கூறினார்கள். இதைத்தொடர்ந்து காயமடைந்த ஜெகனை போலீசார் தங்களது கண்காணிப்பில் குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். குணமடைந்த பின் கைது செய்து சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளனர்.