50 பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்தின் முன்பக்க சக்கரம் உடைந்து நொறுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது...
50 பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்தின் முன்பக்க சக்கரம் உடைந்து நொறுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது...;
சிவகாசி அருகே குண்டும் குழியுமாக உள்ள சாலையில் 50 பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்தின் முன்பக்க சக்கரம் உடைந்து நொறுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது... சிவகாசி ஸ்ரீவில்லிபுத்தூர் பிரதான சாலை சாட்சியாபுரம் பகுதியில் தற்போது ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் நடைபெற்று வருவதால் சிவகாசியிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் வாகனங்கள் அனைத்தும் ஆனையூர் வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்காலிகமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ள சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால் சால அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனிடையே இன்று சிவகாசியிலிருந்து ராஜபாளையம் நோக்கி 50 பயணிகளுடன் சென்ற தனியார் பயணிகள் பேருந்து குண்டும் குழியுமாக உள்ள சாலையில் பள்ளத்தில் ஏறி இறங்கியபோது முன்பக்க சக்கரம் உடைந்து நொறுங்கிதால் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்தை உடனடியாக ஓட்டுநர் நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. நடுரோட்டில் முன்பக்க சக்கரம் உடைந்து நொறுங்கியதால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது இதனைத் தொடர்ந்து கிரேன் வாகனம் வரவழைக்கப்பட்டு பேருந்தை சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் இந்தச் சாலையை சீரமைக்க பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.