50வது வார்டில் நடைபெற்ற முகாமினை ஆய்வு மேற்கொண்ட துணை மேயர்
திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயர் ராஜு;
திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 50வது வார்டில் இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு பல்வேறு குறைகளை மனுவாக அளித்து பயன்பெற்றனர். இந்த முகாமில் திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயர் ராஜு கலந்து கொண்டு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் 50வது வார்டு கவுன்சிலர் ரசூல் மைதீன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.