கும்பகோணத்தில் 500 கிலோ குட்கா பறிமுதல் - 2 பேர் கைது

கும்பகோணத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான 500 கிலோ குட்காவை, காவல்துறையினர் நேற்று பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனர்.

Update: 2024-01-04 04:35 GMT

கைது 

கும்பகோணம் ஏ.ஆர்.ஆர் சாலை மணிக்காரத் தெருவில் குட்காவை மறைத்து வைத்து விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில், கும்பகோணம் மேற்கு காவல்துறையினர் அப்பகுதிச் சென்று கண்காணித்தனர். தொடர்ந்து, அங்குள்ள கிடங்கு ஒன்றில் சோதனை நடத்தியபோது ரூ.5 லட்சம் மதிப்பிலான 500 கிலோ குட்கா பதுக்கி வைத்திருப்பதைக் கண்டுபிடித்தனர். தொடர்ந்து, அவற்றை பறிமுதல் செய்து, இதுதொடர்பாக கவரைத் தெருவைச் சேர்ந்த சதீஷ்குமாரை (30) கைது செய்தனர். அவர் அளித்த தகவலின் பேரில் கிடங்கு உரிமையாளரான கும்பேஸ்வரர் மேல வடபோக்கித் தெருவைச் சேர்ந்த லலித் குமாரை (53) கைது செய்தனர். மேலும், 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News