500 கிலோ எடையுள்ள ராக்கெட்டுகள் குலசேகரப்பட்டித்திலிருந்து ஏவப்படும்

பி.எஸ்.எல்.வி, 500 கிலோ எடையுள்ள ராக்கெட்டுகள் குலசேகரப்பட்டினம் ஏவு தளத்திலிருந்து ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.;

Update: 2024-03-09 16:49 GMT

இஸ்ரோ தலைவர் சோம்நாத்

திண்டுக்கல்லில் உள்ள காந்தி கிராமம் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இஸ்ரோ தலைவர் சோமநாத் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்தார் அப்போது அவர் கூறுகையில்: சந்திராயன்-4 இரண்டு ராக்கெட்டுகளாக விண்ணில் ஏவப்படுவதாக உள்ள தகவல் குறித்த கேள்விக்கு: இன்னும் இறுதியாக முடிவு செய்யப்படவில்லை.

இஸ்ரோ ஏவுதளத்திலிருந்து தனியார் ராக்கெட்டுகள் ஏவப்படுவது குறித்த கேள்விக்கு: தனியார் ராக்கெட் முதலில் சின்னதாக ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட உள்ளது.  ஈபானா என்ற பெயர் சிறிய சாட்டிலைட் ராக்கெட், ராக்கெட் காண பணிகள் நடந்து கொண்டிருக்கிறது, தனியார் ராக்கெட் சென்னை ஏவுதலத்தில் இருந்து  விண்ணுக்கு ஏவப்படும்.

Advertisement

அக்னிக்குல் எப்போது விண்ணில் பாயப்படும் என்பது குறித்த கேள்விக்கு: அக்னிகுல் ராக்கெட்டின் இஞ்சின் பொருத்தப்பட்டு ராக்கெட்டை தயார் செய்யும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குலசேகரபட்டினத்தில் ராக்கெட்டுகள் எப்போது விண்ணில் ஏவப்படும் என்பது குறித்த கேள்விக்கு: பணிகள் முடிய இரண்டு வருட காலம் ஆகிவிடும், அதற்கு முன்னதாக சிறிது ராக்கெட்டுகள் குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட்டுகள் ஏவப்படலாம்.

குலசேகரப்பட்டின விண்கல தளத்திலிருந்து கனரக ராக்கெட்கள் ஏவப்படுமா என்பது குறித்த கேள்விக்கு: குலசேகரப்பட்டினம் ஏவு தளத்தில் பாதுகாப்பு அதிகமாக உள்ளது அருகில் கன்னியாகுமரி, ஸ்ரீலங்கா போன்ற இடங்கள் உள்ளது,  பி.எஸ்.எல்.வி, 500 கிலோ எடையுள்ள ராக்கெட்டுகள் குலசேகரப்பட்டினம் ஏவு தளத்திலிருந்து ஏவப்படும்.

இஸ்ரோவில் பெண் விஞ்ஞானிகள் அதிகம் பணியாற்றுவது குறித்து பல கட்சித் தலைவரும் வரவேற்பு அளித்துள்ளனர் குறித்த கேள்விக்கு: இஸ்ரோவில் 20 சதவீதம் பெண் விஞ்ஞானிகள் தான் பணியாற்றுகிறார்கள், இஸ்ரோவில் பெண் விஞ்ஞானிகள் பணியாற்றுவது நன்றாக இருக்கிறது என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News