உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 50000 பணம் பறிமுதல்

உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 50000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2024-03-22 06:39 GMT

வாகன சோதனை 

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் தீவிரமாக பணம் பட்டுவாடாவை தடுக்க வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சென்னை, மதுரவாயல் அருகே வானகரம் சுங்கச்சாவடி பகுதியில் தீவீர சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த திருநின்றவூர் நடு குத்தகை பகுதியைச் சேர்ந்த மோகன்(50) என்பவரை பிடித்து சோதனை செய்தபோது உரிய ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற 51,400 ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் பணம் பிடிபட்ட நபர் இன்ஜினியரிங் காண்கிரேட் நடத்தி வருவதாகவும் கான்கிரேட்டில் பணி புரியக்கூடிய நபர்களுக்கு பணம் கொடுப்பதற்காக எடுத்துச் சென்றதாக தெரிவித்தார். இருப்பினும் உரிய ஆவணம் இன்றி பணம் எடுத்து செல்லப்பட்டதால் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து மதுரவாயல் தாலுக்கா அலுவலகம் கொண்டு சென்று சீல் வைத்து அதன் பின் பூந்தமல்லியில் உள்ள கருவூலத்திற்கு எடுத்துச் சென்று ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News