காபி வித் கலெக்டர் நிகழ்ச்சியில் 53 வது கலந்துரையாடல்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பயிலும் தேர்வு செய்யப்பட்ட 30 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியருடன் உரையாடினர்.

Update: 2023-12-29 01:47 GMT

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி காபி வித் கலெக்டர் இந்த நிகழ்ச்சியின் 53வது கலந்துரையாடல் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பயிலும் தேர்வு செய்யப்பட்ட 30 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியருடன் உரையாடினர்.

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கல்லூரி மாணவ, மாணவிகளிடம், அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம் உள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார். பள்ளி, கல்லூரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். எனவே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம்.

அனுபவங்களில் இருந்து கிடைக்கும் கல்விதான் சிறந்த கல்வியாகும். தமிழ் ஆர்வத்தை வளர்த்தல், சிறுகதை படைத்தல், படைப்பிலங்கியங்கள்;, தமிழ் அறிஞர்கள் குறித்தும் கல்லூரி மாணவ ஃ மாணவர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துரையாடினார். கல்லூரி படிப்பில் சேர்வதற்கு விருப்பத்தின் அடிப்படையில் மட்டும் முடிவு எடுத்தல் கூடாது. அனைவருக்கும் இலட்சியம் உண்டு. இலட்சியத்தை அடைவதற்கு தொடர்ந்து விடா முயற்சி செய்ய வேண்டும். நிலையான தொடர்ச்சியான சிறிய முயற்சிகள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது. மேலும், ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்கள்; உற்சாகத்துடன் கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சி மூலம் எங்களுக்கு ஒரு புத்துணர்வு, ஊக்கம் அளிப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் போன்று தாங்களும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகி உள்ளதாகவும், எங்களுடைய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் தெளிவான விடை கொடுத்ததாகவும், நாங்களும் மாவட்ட ஆட்சியர் போன்று சாதித்து காட்டுவோம் என்றும், இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் மாணவர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

Tags:    

Similar News