546 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த மூவர் கைது.
மதுரை மேலூர் அருகே தனிப்படை போலீசார் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த மூவரை கைது செய்தனர்.;
மதுரை மாவட்டம் மேலுார் துணை காவல் கண்காணிப்பாளர் சிவகுமாரின் தனிப்படை போலீசார் பாண்டாங்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது கிடைத்த ரகசிய தகவலின் படி மங்களாம்பட்டியில் மதுபாட்டில் பதுக்கி வைத்திருந்த பழனியப்பன் (54) சீயந்தான்பட்டி ராஜபிரபு( 31), செந்துறை சதாசிவம் (32,) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 546 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர் விசாரணை நடத்தி வருகின்றனர்.