தவசிமடை ஜல்லிக்கட்டில் 55 பேர் காயம்

திண்டுக்கல்லை அடுத்துள்ள தவசிமடையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் 55 பேர் காயமடைந்தனா்.

Update: 2024-02-19 06:30 GMT

ஜல்லிக்கட்டு

திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டியை அடுத்த தவசிமடை புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை திண்டுக்கல் கோட்டாட்சியா் கமலக்கண்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இதில், திண்டுக்கல் மட்டுமன்றி, தேனி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 680 காளைகள் களம் இறக்கப்பட்டன. 257 மாடுபிடி வீரா்களும் வாடிவாசல் முன் களம் இறங்கினா். போட்டியில் வெற்றிப் பெற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரா்களுக்கும் மிதிவண்டி, மின் விசிறி, வெள்ளிக்காசு, கட்டில், பீரோ, எவா்சில்வா் பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. காளைகள் முட்டியதில் 21 மாடுபிடி வீரா்கள், காளை உரிமையாளா்கள் 20 போ, 12 பாா்வையாளா்கள், பாதுகாப்புக் குழுவினா் 2 போ என மொத்தம் 55 போ காயமடைந்தனா்.
Tags:    

Similar News