ரூ. 55 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை சென்னைக்கு அனுப்பிய மாவட்ட ஆட்சியர்

மதுரையில் இருந்து ரூ.55 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை சென்னைக்கு அனுப்பப்பட்டன.

Update: 2023-12-08 13:08 GMT

மதுரையில் இருந்து ரூ.55 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை சென்னைக்கு அனுப்பப்பட்டன.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சென்னையில் மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாத்திலிருந்து சென்னையில் மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களை இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். சென்னையில் மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்கு மதுரை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு அலுவலர்கள். தன்னார்வலர்கள், தனியார் அமைப்புகள், பொதுமக்கள் உதவி செய்ய முன் வந்தனர்.

அதனடிப்படையில், மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளான துணிகள், பால் பவுடர், தண்ணீர் பாட்டில் பிஸ்கட், அரிசி, பெட்ஷீட் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இதுவரை ரூபாய் 55 இலட்சம் மதிப்பீட்டில் 10 லாரிகள் மூலம் மதுரை மாவட்டத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.சென்னையில் மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணியில் ஈடுபட்டு வரும் அலுவலர்கள் மூலம் மதுரை மாவட்டத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும் நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Tags:    

Similar News