நாமக்கல் மக்கள் குறைதீர் கூட்டத்தில் 581 மனுக்கள் பெறப்பட்டன
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைத்தால் நடத்தப்பட்ட உதவி ஆய்வாளர்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்ற 5 நபர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் உமா வழங்கினார்.
By : King 24x7 Website
Update: 2024-03-11 13:33 GMT
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 581 மனுக்களை மாவட்ட ஆட்சியர் ச.உமா அவர்களிடம் பொதுமக்கள் வழங்கினார்கள். மனுக்களைப் பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியர் மனுக்களை பரிசீலினை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மைய தன்னார்வ பயிலும் வட்டத்தில் பயின்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைத்தால் நடத்தப்பட்ட உதவி ஆய்வாளர்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்ற 5 நபர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று துறை அலுவலரிடம் வழங்கி அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். மேலும், ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டையை வழங்கினார். முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினர் உற்பத்தி செய்யும் சிறுதானிய உணவு பொருட்களை விற்பனை செய்வதற்கான மதி சிறுதானிய உணவகத்தை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பொ.மா.ஷிலா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.