6பேரை அறிவாளால் வெட்டிய கஞ்சா போதை கும்பல்
6பேரை அறிவாளால் வெட்டிய கஞ்சா போதை கும்பல்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சூரப்பூண்டி ஊராட்சிக்குட்பட்ட ராமச்சந்திராபுரம் கிராமத்தில் உள்ள அரசு நிலத்தில் சென்னை திருவெற்றியூர் பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டன. இப்பகுதியைச் சேர்ந்த சிலர் குடியமர்த்தப்பட்ட நாட்களில் இருந்து கஞ்சா விற்பனை, சட்ட விரோத மது பாட்டில்கள் விற்பனை, சண்டை, சச்சரவு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஹரி என்பவர் அந்த பகுதியில் உள்ள கடைக்கு சென்றபோது அங்கிருந்த ஐந்து பேர் கொண்ட மர்ம நபர்கள் அரிவாளை காட்டி செல் போனை பறித்து கொண்டதாக கூறப்படுகிறது. இதை தட்டி கேட்ட ஹரியை அறிவாளால் வெட்டியதாகவும் கூறப்படுகிறது. தகவல் அறிந்த ராமச்சந்திராபுரம் வில்லியர் பகுதியை சேர்ந்த அருகில் உறவினர்கள் பத்துக்கு மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அவர்களை வழிமறித்த ஐந்து பேர் மேற்கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக தலை கை கால் கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் வெட்டி உள்ளனர். வெங்கடேசன், ரவி, பாலாஜி, வெங்கடேசன், கஸ்தூரியையா ஆகிய 6 பேர் வெட்டு பட்ட நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். கிராமத்தில் பதற்றத்தை தணிக்க 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்