6 வயது மகளுடன் பெண் மாயம் - புகார்

நாகர்கோவில்;

Update: 2025-03-22 13:47 GMT
நாகர்கோவில் அருகே ஒழுகினசேரி பகுதியை சேர்ந்தவர் சிவராஜன் ஆட்டோ டிரைவர்.  இவரது மனைவி வசந்தி (42). இவர் வீட்டில் இருந்து தையல் தொழில் செய்து வருகிறார். இவர்களது இரண்டாவது மகள் சிவகார்த்திகா (6). சம்ப தினம் காலையில் சிவராஜன் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். மாலையில் அவர் வீடு திரும்பிய போது, மனைவி மற்றும் இரண்டாவது மகள் அங்கு இல்லை.       அவர்களை பல இடங்களில் தேடியும் பலன் இல்லை. இதனை தொடர்ந்து வடசேரி போலீசில் சிவராஜன் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான வசந்தி மற்றும் அவரது மகளை தேடி வருகின்றனர்.

Similar News