நாட்றம்பள்ளி அருகே கார் மோதி 6பேர் படுகாயம்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் நின்றிருந்த கார் மீது மற்றொரு கார் மோதிய விபத்தில் 6 பேர்படுகாயம்! திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி தாலுக்கா, லட்சுமிபுரம் அருகே பாபு (65) என்பவரின் வீட்டிற்கு புதுமனை புகுவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது உறவினர்கள் வந்த கார் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு விழாவிற்கு சென்றிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி அதி வேகமாக சென்ற கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீதும் அருகில் இருந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் மீதும் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் இருந்த மூன்று பேர் மற்றும் மோதிய காரில் இருந்த மூன்று பேர் என மொத்தம் ஆறு பேர் படுகாயங்களுடன் நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து நாட்றம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.