60 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த கிராமத்தின் பொதுப்பாதையை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் விவசாயிகள் விளைநில பொருட்களை எடுத்துச் செல்ல முடியாமல் பரிதவிப்பு
ஆக்கிரமிப்பை அகற்றி, பொதுப் பாதையை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் கிராம விவசாயிகள் கோரிக்கை;
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா வருசநாடு அருகே கோவில் பாறை கிராமம் அமைந்துள்ளது இந்த கிராமத்தில் உள்ள விவசாயிகள் கடந்த 60 ஆண்டுகளாக கிராமத்தில் இருக்கும் பொது பாதையை பயன்படுத்தி தங்களது தோட்டத்திற்குச் சென்று விவசாயம் மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அதே கிராமத்தைச் சேர்ந்த தனி நபர்கள் பொதுப் பாதையை ஆக்கிரமிப்பு செய்து விவசாயிகளை அந்தப் பாதையை பயன்படுத்த விடாமல் தடுப்பதாக கூறப்படுகிறது. இதனால் தங்களது தோட்டத்தில் இருந்து விளை நில பொருட்களை எடுத்து வர முடியாமல் தவித்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றன . இந்த நிலையில் இது குறித்து பாதையை ஆக்கிரமிப்பு செய்த நபர்களிடம் விவசாயிகள் கேட்டபோது கொலை மிரட்டல் விடுப்பதாக தெரிவித்து தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் புகார் மனு கொடுத்துள்ளனர்.தங்களது விளைநில பொருட்களை எடுத்து வர பயன்படுத்தும் கிராமத்தின் பொதுப் பாதை ஆக்கிரமிப்பு செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுத்தும் பொதுப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.