கம்யூனிஸ்டு கட்சிக்கு தேர்தல் நிதியாக ரூ.60 ஆயிரம்

தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பு கம்யூனிஸ்ட் கட்சிக்கு தேர்தல் நிதி ரூ.60- ஆயிரம் வழங்கினர்.

Update: 2024-04-10 09:44 GMT
விழுப்புரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட அலுவலக கூட்டரங்கில் புதன்கிழமை தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் சார்பில் நடைபெற்ற சிறப்பு பேரவை கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தேர்தல் நிதிஆக 60ஆயிரம் வழங்கினர். கூட்டத்திற்கு சங்க கிளைத்தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார், கூட்டத்திற்கு கிளை நிர்வாகிகள் எஸ்.கண்ணையன், ராஜேந்திரன், பாண்டுரசனங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கிளைச் செயலாளர் புருசோத்மன், சிஐடியு மாவட்ட தலைவர் முத்துக்குமரன், சங்க மாநில செயலாளர் சண்முகசுந்தரம், கோட்டி கிளைச் செயலாளர் சேகர் ஆகியோர் கலந்து கொண்டு கடந்த 10- ஆண்டுகளாக ஒன்றிய பாஜக அரசு மின்சார வாரியத்தை தனியார் மயமாக்க முயற்சி செய்து வருகிறது, ஏற்கனவே புதிய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், எதிர்காலத்தில் ஓய்வூதியமே இல்லை என்ற நிலை உருவாகும் என்ற அபாயமான நிலை வர இருக்கிறது, முத்தரப்பு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் அதனைத் தொடர்ந்து கட்சி தேர்தல் நிதிக்காக சங்கத்தினர் ரூ.60- ஆயிரத்தை கட்சி மாவட்ட செயலாளர் சுப்பிரமணியனிடம் கொடுத்தனர், அதனை அவர் பெற்றுக் கொண்டார். கூட்டத்தில் கிளை நிர்வாகிகள் ராமலிங்கம், வளர்மதி, ஏழுமலை, பூபாலன், ராமலிங்கம், சண்முகம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் சந்திரசேகர் அனைவருக்கும் நன்றி கூறினார்.
Tags:    

Similar News