2023ல் 60 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
Update: 2023-12-28 08:39 GMT
திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து 2023ல் வெளி மாவட்டங்களுக்கு கடத்தப்பட்ட 60 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் 252 பேரை கைது செய்தனர். திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீசாரால் வெளி மாவட்டங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தியது தொடர்பாக 2023ல் 240 வழக்குகள் பதியப்பட்டு 60 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 252 பேர் கைது செய்யப்பட்டனர். கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி, மினிலாரி, ஆம்னி வேன் உள்ளிட்ட 26 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இதோடு கடைகளில் பயன்படுத்திய 23 வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டன. வழக்கில் கைதான ஒருவர் மீது குண்டர் சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.