600 ஆண்டு பழமையான சிவன் கோவில் பாலாலய விழா

தாமரைக்குடியில் 600 ஆண்டு பழமையான சிவன் கோவில் பாலாலய விழா நடந்தது.

Update: 2023-12-14 15:10 GMT

தாமரைக்குடியில் 600 ஆண்டு பழமையான சிவன் கோவில் பாலாலய விழா நடந்தது.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே அரசகுளம் ஊராட்சிக்குட்பட்ட தாமரைக்குடி கிராமத்தில் 600 ஆண்டுகள் பழமையான மகாலிங்கம் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் கோயிலை சீரமைப்பதற்காக இன்று காலை தவத்திரு சுந்தரவடிவேல் சுவாமிகள் மற்றும் சமூக ஆர்வலர் தஞ்சாக்கூர் பாலசுப்பிரமணி, மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்ட பாலாலய பூஜை நடைபெற்றது.

இதனை தொடர்ந்து மகா அனுக்ஞை, மிருத்ஸங்க ரஹனம், புஷ்ப அங்குரம், சாந்தி ஹோமம், திக்பந்தனம், நித்திய ஆராதனம், திருமஞ்சனம், கலாகர்ஷனம், கும்பஸ்தாபனம், த்வாரதோரண பூஜை, கும்ப மண்டல அக்னி ஆராதனை முதலான வழிபாடுகள் நடைபெற்றன. ரூபாய் 50 லட்சம் செலவில் இக்கோவிலின் திருப்பணிகள் நடைபெற உள்ளது

Tags:    

Similar News