வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000/- நிவாரண நிதி

Update: 2023-12-21 11:23 GMT
மதுரவாயல் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, வார்டு 154,155,152,151,153,150 ஆகிய பகுதி ரேஷன் கடை மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெருமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000/- நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சியில் மதுரவாயல் எம்.எல்.ஏ கணபதி கலந்து கொண்டு நிவாரண நிதி வழங்கினர். இந்நிகழ்வில் மண்டலம்-11, மண்டலக் குழுத் தலைவர் நொளம்பூர் வே.ராஜன், M.C., பகுதி கழக நிர்வாகிகள்,வட்ட செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள், அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News