நாமக்கல் மாவட்டத்தில் நீட் தேர்வில் 6,120 மாணவர்கள் பங்கேற்பு

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு நீட் தேர்வை 5,276 பேர் எழுதினர். இந்தாண்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Update: 2024-05-04 11:50 GMT

கோப்பு படம் 

இளநிலை மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வை ஒவ்வொரு ஆண்டும் தேசிய தேர்வு முகமை (NTA), மிகுந்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புடன் நடத்தி வருகிறது. அதன்படி NEET தேர்வு நாளை(5.5.2024) ஞாயிற்றுக்கிழமை மதியம் நடைபெற உள்ளது.

தேர்வு நேரம்: 2:00 pm to 5:20 pm மையத்திற்குள் அனுமதிக்கப்படும் நேரம்: 11:30 am to 1:30 மட்டும். நடப்பாண்டில் +2 முடித்தவர்கள், கடந்த ஆண்டுகளில் NEET தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெறாதவர்கள், வாய்ப்பு கிடைக்காதவர்கள் இந்த முறை தேர்வு எழுதுகின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 6,120 பேர் NEET தேர்வு எழுதுகின்றனர். இதற்காக 11 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்ட NEET தேர்வு மையங்கள் மற்றும் அதில் தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை விவரங்கள்: 01) பாச்சல் பாவை பொறியியல் கல்லூரி (1000 பேர்) 02)நாமக்கல் காவேட்டிப்பட்டி குறிஞ்சி சீனியர் செகண்டரி பள்ளி (700 பேர்) 03) நாமக்கல் ட்ரினிட்டி இன்டர்நேஷனல் பள்ளி (700 பேர்) 04) தி நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளி (670 பேர்) 05) நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளி (600 பேர்) 06) நாமக்கல் தி ஸ்பெக்ட்ரம் அகாடமி (500 பேர்) குமாரபாளையம் வட்டம் பல்லாக்காபாளையம் 07) ராயல் இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளி (550 பேர்) 08) எக்ஸெல் பொறியியல் கல்லூரி (450 பேர்) 09) திருச்செங்கோடு KSR அக்ஷரா அகாடமி (430 பேர்) 10) வித்யா விகாஸ் இன்டர்நேஷனல் பள்ளி (280 பேர்), 

11) ஏமப்பள்ளி ரமணி இன்டர்நேஷனல் பள்ளி (240 பேர்) ஆகிய 11 மையங்கள் NEET தேர்வுக்காக அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையத்திலும் 5 காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். ஒவ்வொரு மையத்திலும் தேர்வு எழுதும் மாணவ மாணவியர் எண்ணிக்கை விவரம் தேசிய தேர்வு முகமையால் வெளியிடப்பட்டுள்ளது என்றும், நாமக்கல்லில் NEET தேர்வு ஏற்பாடு குழுவினர் தெரிவித்தனர். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு நீட் தேர்வை 5,276 பேர் எழுதினர். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை 844 அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News