62 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மகளிருக்கு ரூ.3.06 கோடி மதிப்பிலான மானிய தொகை வழங்கப்பட்டுள்ளது

மகளிர் நலனில் அக்கறைகொண்டு திட்டங்களை வழங்கும் தமிழக முதலமைச்சர் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்ற பெண்கள் நன்றி தெரிவித்தனர்.;

Update: 2025-02-13 14:21 GMT
பெரம்பலூர் மாவட்டம் தாட்கோ மூலமாக நன்னிலம் மகளிர் நில உடமை திட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் 62 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மகளிருக்கு ரூ.3.06 கோடி மதிப்பிலான மானிய தொகை வழங்கப்பட்டுள்ளது - மகளிர் நலனில் அக்கறைகொண்டு திட்டங்களை வழங்கும் தமிழக முதலமைச்சர் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்ற பெண்கள் நன்றி தெரிவித்தனர் . தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன மக்களுக்கு நிலையான வளர்ச்சி, சமூகப் பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சியை பொது பிரிவினர் அளவிற்கு கொண்டு வருதல், இலவச வீட்டுமனை பட்டா வழங்குதல், வீடுகள் கட்டித் தருதல், ஆரம்பப் பள்ளிகள் ஏற்படுத்தி தருதல், விடுதிகள், சுகாதார மையங்கள், சமுதாயக்கூடங்கள் மற்றும் குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவதோடு, பல்வேறு சிறப்பு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலமாக நன்னிலம் மகளிர் நில உடமை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் நிலம் இல்லாத ஏழை, எளிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மகளிர்களுக்கு நிலம் வாங்கும் ஓர் உன்னத திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஒரு ஏக்கர் நிலம் வாங்குவதற்கும், அதிகபட்சமாக 5 லட்சம் வரையும் மானியமாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் விண்ணப்பதார் 18 முதல் 55 வயதுக்குள்ளான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராகவும், இருத்தல் வேண்டும், ஆண்டு வருமான உச்சவரம்பு 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும், விவசாய நிலம் சொந்தமாக வைத்து இருக்கக் கூடாது. தொழில் விவசாயமாக இருக்க வேண்டும், நிலத்தின் விலை சந்தை மதிப்பீட்டின் படி இருக்க வேண்டும், நிலம் விற்பனை செய்பவர் ஆதிதிராவிடர் பழங்குடியினர் அல்லாத பிற இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். முத்திரைத்தாள் மற்றும் பத்திரப் பதிவு கட்டணத்தில் இருந்து இத்திட்டத்தின் கீழ் முழுமையாக விலக்கு அளிக்கப்படுகிறது. நிலத்தினை வாங்கும் விண்ணப்பதாரர் 10 வருடங்களுக்கு விற்பனை செய்ய இயலாது. மேலும் நிலம் கிரையம் செய்வதற்கு மானியத் தொகை போக, பங்குத்தொகை செலுத்துவதற்கு போதிய தொகை இல்லாமல் இருந்தால் கூட, தேசிய பட்டியல் இனத்தோர் நிதி மேம்பாட்டு கழக நிதியிலிருந்து 6 சதவீதம் வட்டியுடன் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் கடனாக பெற்று நிலம் வாங்கலாம் என்பது இத்திட்டத்தின் ஓர் சிறப்பு அம்சமாகும். இத்திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் 62 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மகளிருக்கு ரூ.3.06 கோடி மதிப்பிலான மானிய தொகை வழங்கப்பட்டு பயன் பெற்றுள்ளனர். தமிழ்நாட்டிலேயே இத்திட்டத்தின் கீழ் அதிக பயனாளிகள் பயன்பெற்றதில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தின் கீழ் பயன்பெற்றுள்ள ஆலத்தூர் வட்டம், நத்தக்காடு கிராமத்தை சேர்ந்த கவிதா க/பெ நந்தகுமார் அவர்கள் தெரிவித்ததாவது நானும் எனது கணவரும் நத்தக்காடு கிராமத்தில் ஒரு மகன் ஒரு மகளுடன் வசித்து வருகிறோம். நாங்கள் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள், விவசாய கூலி வேலை செய்து வருகிறோம். சொந்தமாக நிலம் வாங்கி விவசாயம் செய்திட ஆசைகள் அதிகமாக இருந்தாலும், அந்த நிலத்தினை வாங்குவதற்கு போதிய பொருளாதாரம், வசதி வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்தோம். அச்சமயம் தான் செய்தித்தாள் மற்றும் சமூக வலைதளமான வாட்ஸ்ப்பில் மூலம் நிலம் இல்லாத ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களுக்கு 5 லட்சம் வரை மானியத்தில் நிலம் வாங்குவதற்காக தாட்கோ மூலமாக நிதி உதவி வழங்கப்படுவதை அறிந்து அதன் விபரங்களை சேகரித்து முறையாக விண்ணப்பித்தேன். விண்ணப்பத்தை பரிசினை செய்த அலுவலர்கள் எனக்கு எங்கள் கிராமத்திலேயே ஒரு ஏக்கர் நிலம் வாங்குவதற்கு 50% மானியமாக அல்லது அதிகபட்சம் 5 லட்சம் மானியமும் வழங்கி பத்திர பதிவு இலவசமாகவும் செய்து கொடுத்தனர். இதன் மூலமாக நானும் எனது கணவரும் விவசாய தொழில் செய்து எங்களுக்கு தேவையான பொருளாதாரத்தை உருவாக்கி கொள்ள மிகப்பெரிய வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது இதை நினைத்து பார்க்கும் பொழுது மிக்க மகிழ்ச்சியாகவும் நம்ப முடியாத அளவு பிரமிப்பாகவும் உள்ளது. இத்திட்டம் கிடைக்க உதவி புரிந்த தமிழக அரசிற்கு மனம் நிறைந்து, மகிழ்ச்சியுடன் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்றுள்ள ஆலத்தூர் வட்டம், டி.களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அபிராமி க/பெ லோகராஜ் அவர்கள் தெரிவித்ததாவது எனக்கும் எனது கணவருக்கும் விவசாய தொழில் தவிர வேறு எந்த தொழிலும் தெரியாது, நாங்கள் இருவரும் விவசாய கூலி வேலை செய்து வருகிறோம், சிறுவயதில் இருந்தே சொந்தமாக எனது பெயரில் விவசாய நிலம் வாங்க மாட்டமோ என்ற ஏக்கம் நிறையவே இருந்து வந்தது. இதுவரை எனது அம்மா அப்பா பெயரிலும், எனது கணவர் உடைய அப்பா அம்மா பெயரிலும் கூட நிலங்கள் எதுவும் இருந்தது இல்லை இதுவே எனக்கு மிக வருத்தமாகவும், கவலையாகவும் இருந்து வந்தது. அப்பொழுதுதான் எங்களுடைய கிராமத்தில் நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தின் கீழ் தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு நிலம் வாங்குவதற்காக திட்ட மதிப்பீட்டில் அதிகபட்சமாக 5 லட்சம் வரையும் அல்லது 50% மானியமும் வழங்கப்படுவதாக என்னிடம் தெரிவித்தனர். இதனை அறிந்து நானும் எனது கணவரும் தாட்கோவில் விண்ணப்பித்தாம், என்னுடைய விண்ணப்பத்தினை பரிசீலனை செய்து எனக்கு நிலம் வாங்குவதற்கு 5 லட்சம் மானியமும் பத்திர பதிவு இலவசமாக செய்து கொடுத்தனர் சிறுக, சிறுக சேமித்து வைத்திருந்த சேமிப்பு பணத்தை கொண்டு பங்கு தொகை செலுத்தி நிலம் வாங்கி விட்டேன். இப்பொழுது என்னுடைய பெயரில் நிலம் உள்ளது. நிலம் மற்ற ஏழை எளிய ஆதிதிராவிட பழங்குடியின மக்களுக்கு நிலம் வாங்குவதற்கான உன்னத திட்டமான இந்த நன்னிலம் மகளிர் நில உடமை திட்டம் நீடித்த, நிலையான பொருளாதாரத்தை உயர்த்தக்கூடிய அருமையான திட்டமாகும். தலைமுறைக்காக்கும் திட்டம் தந்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், தாட்கோவிற்கும் என்றென்றும் நிறைந்த நிறைந்த மனமாக நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

Similar News