குமரியில் ஒரே நாளில் ரூ 6.25 கோடிக்கு மது விற்பனை
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ரூ.6.25 கோடிக்கு பல்வேறு ரக மதுபானங்கள் விற்பனையானது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 100 டாஸ்மாக் மது கடைகள் உள்ளன. இந்த கடைகள் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த மதுக்கடை மூலமாக தினமும் 2 கோடி முதல் 3கோடி ரூபாய் மதுபானங்கள் விற்பனையாகி வருகிறது. பண்டிகை காலங்கள் மற்றும் விடுமுறை காலங்களில் அதிகபட்சமாக 5 கோடி ரூபாய் வரை விற்பனையாகும் என்று தெரிய வருகிறது. இதற்கிடையே தேர்தல் காரணமாக கடந்த 17, 18, 19 ஆகிய தேதிகளில் மதுக்கடைகள் மூடப்பட்டன..இதன் காரணமாக 15 ஆம் தேதியே மது பிரியர்கள் வாங்கியதில் அன்றைய தினம் ரூபாய் 6.25 கோடியில் மது விற்பனை நடந்தது.
இந்த நிலையில் மூன்று நாட்களுக்கு பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில், மகாவீர் ஜெயந்தி விழா நேற்று நடைபெற்றது. இதன் காரணமாக நேற்று மதுக்கடைகள் மூடப்பட்டது. இந்த வகையில் நேற்று முன்தினம் மாவட்டம் உள்ள மது கடைகளில் மது பிரியர்கள் கூட்டம் அலைமோதியது. இதில் பீர், பிராந்தி, விஸ்கி போன்ற மதுபானங்கள் மீண்டும் ஒரே நாளில் ரூ 6.25 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.