உளுந்துார்பேட்டை அடுத்த எலவனாசூர்கோட்டையில் போலீசார் நேற்று மதியம் 2.00 மணிக்கு ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும்படியாக சென்ற மினி டெம்போவை நிறுத்த முயன்ற போது, நிற்காமல் அதிவேகத்தில் சென்றது.உடன், போலீசார் அந்த வாகனத்தை 4 கி.மீ., விரட்டிச் சென்று எலவனாசூர்கோட்டை அடுத்த புத்தமங்கலம் அருகே மடக்கி பிடித்தனர். அதை சோதனை செய்தபோது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் 628 கிலோ இருந்தன. அவற்றை பறிமுதல் செய்து கரூர் மாவட்டத்தை சேர்ந்த சிவக்குமார், 47, திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சஞ்சய்குமார், 38, ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.