செய்யாறில் 63 நாயன்மார்கள் திருவீதி உலா

செய்யாறில் அருள்மிகு ஶ்ரீ பாலகுஜாம்பிகை சமேத ஶ்ரீவேதபுரீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா நடந்தது.

Update: 2024-02-15 07:23 GMT


செய்யாறில் அருள்மிகு ஶ்ரீ பாலகுஜாம்பிகை சமேத ஶ்ரீவேதபுரீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா நடந்தது.


திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் திருவோத்தூரில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ பாலகுஜாம்பிகை சமேத ஶ்ரீவேதபுரீஸ்வரர் திருக்கோயில் ஆண்டுதோறும் தை மாதத்தில் நடைபெறும் ரத சப்தமி பிரமோற்சவ விழா கடந்த 10-ந்தேதி விடியற்காலை சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை 16-ந்தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

முதல் நாள் நிகழ்வில் கற்பக விருட்சம், காமதேனு வாகனத்தில் சாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தொடர்ந்து இரண்டாம் நாள் நிகழ்வான காலை சூரிய பிரபை உற்சவம், இரவு சந்திர பிரபை உற்சவம். 3-நாள் விழாவில் பூத வாகன சேவையும், 4-வது நாளில் பெரிய நாக வாகன சேவையும், 5-வது நாள் காலை அதிகார நந்தி வாகன சேவையும், இரவு பெரிய ரிஷப வாகன சேவையும் நடந்தது.

தொடர்ந்து இன்று 6-வது நாள் விழாவில் காலை 63 நாயன்மார்கள் திருவீதி உலா நிகழ்வும், அருள்மிகு ஶ்ரீ பாலகுஜாம்பிகை சமேத ஶ்ரீவேதபுரீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News