காரில் கடத்திய 650 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

மணவாளக்குறிச்சி அருகே காரில் கடத்திய 650 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2024-06-28 17:54 GMT

ரேஷன் அரிசி பறிமுதல் 

கன்னியாகுமரி மாவட்ட பறக்கும் படை தாசில்தார் ரமேஷ் தலைமையில் துணை தாசில்தார் ராஜா உள்ளிட்ட அதிகாரிகள் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் நேற்று சுங்கான் கடை  பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது ஆளூர் ரயில்வே பகுதியில் செல்லும் போது அங்கு ரயில் மூலம் கேரளாவில் கொண்டு செல்ல சிறு சிறு பிளாஸ்டிக் பைகளில் சுமார் 200 கிலோ ரேஷன் அரிசி மூடைகள் தண்டவாளம் பகுதியில் பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்தனர்.

உடனே அவர்களை மீட்டு உடையார் விளை  அரசு நுகர்பொருள் வாணிப குடோனில் ஒப்படைத்தனர்.         இதேபோல் இன்று அதிகாலை மனவளக்குறிச்சி பெரிய விளையில் ஒரு சொகுசு கார் வந்து கொண்டிருந்தது. அந்த காரை நிறுத்த முயற்சித்தனர். ஆனால் கார் சென்று விட்டது. உடனே அதிகாரிகள் பின் தொடர்ந்து காரை துரத்தி சென்று மண்டைக்காடு புதூர் பகுதியில் நிறுத்தினர். 

கார் டிரைவர் காரை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். பின்னர் அதிகாரிகள் காரை சோதனை செய்தபோது காருக்குள் 13 பிளாஸ்டிக் பைகளில் சுமார் 650 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். அரிசியை மீட்டு உடையார் விளை குடோனில் ஒப்படைத்தனர். வாகனத்தை கல்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News