சிவகங்கை மாவட்டத்தில் காவலர் தேர்வு எழுதிய 6,822 பேர்
Update: 2023-12-11 08:12 GMT
தேர்வு எழுத வந்தவர்கள்
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், தீயணைப்பு வீரர் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு நடைபெற்றது. இதில் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியில் அழகப்பா அரசு பொறியியல் கல்லூரி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி உட்பட 11 மையங்களில் தேர்வு எழுத 8,500 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 6,822 பேர் தேர்வு எழுதினர். குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு ஐஜி ஜோதிஷ் நிர்மல் குமார், சிவகங்கை எஸ்பி அரவிந்த் ஆகியோர் தலைமையில் 900 பேர் தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்