7 வயது சிறுவன் நான்கு அடுக்கு கண்ணாடி டம்ளர் மீது அமர்ந்து யோகாசனம் செய்து உலக சாதனை

7 வயது சிறுவன் நான்கு அடுக்கு கண்ணாடி டம்ளர் மீது அமர்ந்து யோகாசனம் செய்து உலக சாதனை புரிந்துள்ளார்.

Update: 2023-12-03 16:09 GMT

யோகா செய்யும் சிறுவன்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் வட்டம் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில். அவலூர்பேட்டை சேர்ந்த முகமது அசின், நர்கீஸ் இவர்களது மகன் எஸ் கே வி பள்ளி மாணவனாகிய முகமது ஈர்ப்பான் என்ற ஏழு வயது சிறுவன், இந்திய யோகா ஆராய்ச்சி மையம் சார்பாக மற்றும் சுற்றுப்புற சுகாதார சூழலை பாதுகாக்க வலியுறுத்தி நான்கு அடுக்கு கண் ணாடி டம்ளர்மீது அமர்ந்து யோகாசனம் மூலம் உலக சாதனை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்த நிகழ்வை தமி ழக துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி துவக்கி வைத்தார். மேலும் தேர்வு நிலைபேரூராட்சி சரவணன், கீழ் பென்னாத்தூர் திமுக நகர செயலாளர் அன்பு, யோகா பயிற்சியாளர் கல்பனா, இந்திய யோகா ஆராய்ச்சி மையம் ஒருங்கிணைப்பா ளர் செல்வசேகரன், ஹயாத் பாஷா அறிவியல் ஆசான் மற்றும் சிவனடி யார் சாதுக்கள் சேவை மைய நிறுவனர் பரதேசி நாகராஜன், தொழிலதிபர் வஜ்ரவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தலைமை தாங்கினர். மேலும், உலக சாதனை செய்த 7 வயது பள்ளி மாணவனுக்கு பாராட்டு சான்றிதழ், பதக்கங்கள்.

உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் யோகா பயிற்சியாளர்கள் மற்றும் பள்ளி சிறப்பாக பணியாற்றிய பள்ளி ஆசிரியர்கள். பல சாதனைகள் படைத்த பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் பள்ளி மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News