7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: 70 வயது நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை !
கோவை போக்சோ நீதிமன்றம் 70 வயது முதியவருக்கு கடும் தண்டனை விதித்து தீர்ப்பு.;
கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த சேகர் (70), கடந்த ஆண்டு 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கிழக்கு மகளிர் காவல் துறையினர் சேகரை கைது செய்தனர். இந்த வழக்கு கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. விசாரணை முடிவில் நீதிமன்றம் சேகருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ₹10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.