மெக்கானிக் கொலை வழக்கில் 7 பேர் கைது
போடிக்காமன்வாடியில் முன் விரோதத்தால் டூவீலர் மெக்கானிக் தெருவில் ஓடஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்டார்.இதில் தொடர்புடைய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.;
Update: 2024-01-11 11:18 GMT
செந்தில்குமார்
செம்பட்டி அருகே போடிக்காமன்வாடியை சேர்ந்தவர் செந்தில்குமார் 42. இவருக்கும் இதே ஊரைச் சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. அதே ஊரைச் சேர்ந்த சிலர் செந்தில்குமாரை வீட்டிற்குள் நுழைந்து தாக்கினர். தப்பிய அவரை ஓட ஓட விரட்டி கத்தியால் குத்தினர். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். இந்த கொலை வழக்கில் சரவணன் 40, சரவணக்குமார் 27, சரவணகுமார் 31, பாண்டி 32, அமராவதி 35, முத்துலட்சுமி 58, அனுமக்காள் 60, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் 11 பேரை போலீசார் தேடுகின்றனர்.