விழுப்புரம் அருகே காரில் கடத்திய 7 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

விழுப்புரம் அருகே சிறுவந்தாடு பகுதியில் காரில் கடத்திய 7 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2024-05-03 09:38 GMT

விழுப்புரம் அருகே சிறுவந்தாடு பகுதியில் காரில் கடத்திய 7 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


விழுப்புரம் அருகே சிறுவந்தாடு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் காரில் கடத்தப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாச்சுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் மேற்பார்வையில் வளவனூர் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார், சிறுவந்தாடு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து வந்த காரை போலீசார் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை மேற்கொண்ட கொண்டதில் அந்த காருக் குள், 2 சாக்கு மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய் யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. உடனே காரில் இருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் இருவரும், புதுச்சேரி மாநிலம் மடுகரை பகுதியை சேர்ந்த ஷாகுல்அமீது (வயது 61), பெரியபேட்டையை சேர்ந்த கலிய பெருமாள் மகன் ஆதிநாராயணன் (21) என்பதும், இவர்கள் இருவரும் புதுச்சேரியில் இருந்து புகையிலை பொருட் களை கடத்தி வந்து விழுப்புரம் பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளுக்கு சப்ளை செய்ய சென்றபோது சிக்கியதும் தெரியவந்தது.

மேலும் ஷாகுல்அமீது வீட்டில்போலீசார் சோதனை மேற்கொண்டதில் அங்கு 42 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப் பட்டது. இதையடுத்து அவர் கள் இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 351 கிலோ எடை கொண்ட புகையிலைப் பொருட்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News