வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக 7லட்சம் மோசடி

சிங்கப்பூரில் கிரெயின் ஆபரேட்டர் வேலை வாங்கி தருவதாக கூறி 7 லட்ச ரூபாய் வசூல் செய்து விட்டு வெளிநாட்டிற்கு தப்பி ஓட்டம் பிடித்தவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2024-01-30 10:49 GMT

மனு அளித்தவர்கள்

தூத்துக்குடி கால்டுவெல் காலனி பகுதியைச் சேர்ந்தவர் இசக்கி துரை கிரைன் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார் இவரிடம் தூத்துக்குடியைச் சேர்ந்த திணேஷ் குமார் என்பவர் பழகி வந்துள்ளார்.

  இதைத் தொடர்ந்து தினேஷ்குமார் இசக்கி துரை மற்றும் அவரது நண்பர்கள் ஏழு பேரிடம் உங்களுக்கு நல்ல சம்பளத்துடன் சிங்கப்பூரில் கிரேன் ஆபரேட்டர் வேலை திருச்சியை சேர்ந்த எனது நண்பர் தஸ்தகீர் மூலம் வாங்கி தருகிறேன்.

இதற்கு முன்பனமாக தலா ஒரு லட்சம் ரூபாயை ஏழு பேரும் வழங்க வேண்டும் எனக் கூறி ஏழு லட்சம் ரூபாய் தினேஷ்குமார் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு பெற்றுக் கொண்டுள்ளார்.

இதற்காக 20 ரூபாய் பத்திரத்தில் இந்த பணத்திற்கு தான் பொறுப்பு வேலை கிடைக்கவில்லை என்றால் பணத்தை தான் திருப்பித் தருகிறேன் என எழுதிக் கொடுத்துள்ளார்.

  ஆனால் பணத்தைப் பெற்றுக் கொண்ட தினேஷ் குமார் சிங்கப்பூரில் கிரேன் ஆபரேட்டர் வேலை வாங்கி கொடுக்காமல் தலை மறைவாகியதுடன் வெளிநாட்டிற்கு தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.

   இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட கிரேன் ஆபரேட்டர்கள் தப்பிய ஓடிய மோசடி பேர்வழிகளான தினேஷ்குமார் மற்றும் அவரது நண்பர் திருச்சியை தேர்ந்த தஸ்தகிர் ஆகியோரை கைது செய்து தங்களுக்கு பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தனர்.


Tags:    

Similar News