
கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கிள்ளியூர் தொகுதிக்கு உட்பட்ட ஆறுதேசம் கிராமத்தில் 700 க்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்கள் பரம்பரையாக மடத்து பகுதியில் சொந்தமாக வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். இந்த நிலத்தில் குடிப்பவர்கள் 2016 ஆண்டு வரை சொத்து வரி செலுத்தி வந்தனர். அதன்பிறகு வரி செலுத்த சம்பந்தப்பட்ட கிராம அலுவலகத்திற்கு சென்றபோது இது மடத்து வகை சொத்து எனக் கூறி, வரியை ஏற்க மறுத்துள்ளனர். அப்பகுதி மக்கள் கோரிக்கையின் பேரில் அனைத்து நிலங்களுக்கும் உடனடியாக சொத்து வரி செலுத்த நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்தேன். இதன் அடிப்படையில் முதலமைச்சரின் உத்தரவின் படி கடந்த 27ஆம் தேதி குமரி மாவட்ட வருவாய் அலுவலர் அனைத்து நிலங்களுக்கும் மீண்டும் சொத்துவரி செலுத்த அனுமதி அளித்து கடிதம் வழங்கியுள்ளார். இதில் ஆறு தேசம் கிராமத்தில் ஏற்கனவே பட்டதாரர்களிடமிருந்து நிலவரி வசூல் செய்யப்பட்டு தற்போது மறுக்கப்பட்டு வருவார்களிடம் மீண்டும் உடனடியாக நிலவரியினை வசூல் செய்த கிராம நிர்வாக அலுவலர் அறிவித்துள்ளார். பத்மநாபபுரம் சப் கலெக்டருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.