7,000 நடுநிலைப் பள்ளிகளில் ஜூனில் உயர் தொழில்நுட்ப ஆய்வகம்

தொடக்க கல்வி இயக்குநர் ஆய்வு மேற்கொண்டார்

Update: 2024-02-02 10:52 GMT
மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தும் தொடக்க கல்வி இயக்குநர்
தமிழகத்தில் 7 ஆயிரம் நடுநிலைப் பள்ளிகளில் ஜூன் மாதத்தில் உயர் தொழில்நுட்ப ஆய்வகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் தொடக்கக்கல்வி இயக்குநர் எஸ். கண்ணப்பன். தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை முனிசிபல் காலனியிலுள்ள நீலகிரி மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை வியாழக்கிழமை ஆய்வு செய்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஆய்வகங்கள் உள்ளன. ஆனால் நடுநிலைப்பள்ளிகளில் இல்லை. எனவே, தமிழகத்தில் உள்ள 7 ஆயிரம் நடுநிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகம் வருகிற கல்வியாண்டு முதல் தொடங்கப்படவுள்ளது. மேலும் 20 ஆயிரம் தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகளும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு ஜூன் மாதம் முதல் செயல்பாட்டுக்கு வரும். மேலும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இணையதள வசதியுடன் கையடக்க கணினியும் வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களும் தரமான கல்வியை எளிதாக கற்பதற்கான வாய்ப்பு அமையும் என்றார் கண்ணப்பன்.
Tags:    

Similar News