7000 மணல் மூட்டைகள் - கண்மாய் சீரமைப்பு பணி தீவிரம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் சுமார் ரூ. 8 லட்சம் செலவில் 7000 மணல் மூட்டைகள் அடுக்கி உடைந்த கண்மாயை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்தது.
Update: 2023-12-31 06:21 GMT
கடந்த சில வாரங்களுக்கு முன்பு கன்னியாகுமரி கடலில் ஏற்பட்ட காற்றழுத்தம் காரணமாக நெல்லை தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்து தூத்துக்குடி நெல்லை ஆகிய பகுதிகளில் பலத்த சேதமும் ஏற்பட்டது.விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பெய்த மழையின் காரணமாக அனைத்து கண்மாய்களும் குளங்களும் நிறைந்து மறுகால் பாய்ந்தன. அப்போது அதிக நீர் வரத்து காரணமாக திடீரென ஶ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகம் அருகே இருந்த லைலா கண்மாய் உடைந்தது.மேலும் தண்ணீர் அனைத்தும் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்தன. இந்த நிலையில் தற்போது உடைந்த லைலா பெரிய கண்மாயின் பகுதியில் சுமார் 8 லட்சம் செலவில் 7 ஆயிரம் மணல் மூடைகளை அடுக்கி அதனை சீரமைக்கும் பணியில் பொதுப்பணி துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.