திருவண்ணாமலையில் 70வது அனைந்திந்திய கூட்டுறவு வாரவிழா

Update: 2023-11-14 11:01 GMT

70வது அனைந்திந்திய கூட்டுறவு வாரவிழா


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை திருவண்ணாமலை மாவட்டத்தில் 70வது அனைந்திந்திய கூட்டுறவு வாரவிழா 14.11.2023 முதல் 20.11.2023 வரை “ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் மற்றும் நீடித்த மற்றும் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளில் கூட்டுறவு அமைப்புகளின் பங்கு" என்ற பிரதான பொருளில் கொண்டாடப்படுகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 70வது அனைந்திந்திய கூட்டுறவு வாரவிழா 14.11.2023 முதல் 20.11.2023 வரை "ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் மற்றும் நீடித்த மற்றும் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளில் கூட்டுறவு அமைப்புகளின் பங்கு" என்ற பிரதான பொருளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய (ம) பொருளாதாரத்தில் விளிம்பு நிலையில் உள்ள அடிதட்டு மக்களின் முன்னேற்றத்தினை அடிப்படையாக கொண்டு இவ்வாரவிழா கொண்டாடப்படுகிறது.

இன்று கூட்டுறவு அமைப்புகளின் தற்போதைய வளர்ச்சி என்ற பொருளில் திருவண்ணாமலை மாவட்டத்தில் காலை 09.30 மணியளவில் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம், மண்டல அலுவலக வளாகத்தில் மண்டல இணைப்பதிவாளர் கோ.நடராஜன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி வைத்தும், கூட்டுறவு கொடியினை ஏற்றி வைத்தும் மற்றும் மரக்கன்றுகளை நட்டு கூட்டுறவு வார விழாவினை துவக்கி வைத்தார்கள். இவ்விழாவிற்கு திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர்/செயலாட்சியர் கா.ஜெயம் அவர்கள் தலைமை வகித்தார்.

துணைப்பதிவாளர்/பணியாளர் அலுவலர் பா.ராஜசேகரன், சரக துணைப்பதிவாளர் (பொ) சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் செயலாட்சியர் சீ.சுரேஷ்குமார், திருவண்ணாமலை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் செயலாட்சியர் சீ.மீனாட்சிசுந்தரம், திருவண்ணாமலை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் செயலாட்சியர் தீபன் சக்கரவர்த்தி கூட்டுறவு சார்பதிவாளர் இரா.விஜயகுமாரி டான்பெட் மண்டல மேலாளர் சித்ரா, கூட்டுறவு சார்நிலை அலுவலர்கள் மற்றும் கூட்டுறவு சங்க பணியாளர்கள் கலந்து கொண்டனர். 15.11.2023 அன்று கடன்சாரா கூட்டுறவு அமைப்புகள் மற்றும் அனைவருக்குமான உள்ளடக்கிய நிதியம் என்ற தலைப்பில் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அனைத்து கூட்டுறவு நிறுவனங்களிலும் உறுப்பினர் .சேர்க்கை மற்றும் கடன் மேளா நடத்தப்படுகிறது.

16.11.2023 அன்று கூட்டுறவு அமைப்புகளை கணினிமயமாக்குதல் மற்றும் மேம்படுத்துதல் என்ற தலைப்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து கூட்டுறவு நிறுவனங்களையும் கணினி மயமாக்குதல், MSC திட்டத்தை செயல்படுத்துதல் குறித்து விளம்பரபடுத்துதல் மற்றும்செங்கம் வட்டம் அந்தனூர் மற்றும் செய்யார் வட்டம் கடம்பை ஆகிய கிராமங்களில் இலவச கால்நடை சிகிச்சை முகாம்கள் நடத்தப்படுகிறது.

17.11.2023 அன்று கூட்டுறவு அமைப்புகளை பரவலாக்குதல் மற்றும் எளிமைப்படுத்துதல் என்ற பொருளில் மாண்புமிகு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர், மாண்புமிகு சட்டப்பேரவைத் துணைத்தலைவர் ஆகியோர் கலந்து கொள்ளும் மாவட்ட அளவிலான கூட்டுறவு வாரவிழா திருவண்ணாமலையிலுள்ள ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் மாலை 04.00 மணியளவில் மாவட்ட அளவிலான கூட்டுறவு வாரவிழா நடைபெறுகிறது.

18.11.2023 அன்று அரசு தனியார் கூட்டுறவு பங்களிப்பு என்ற பொருளில் திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கூட்ட அரங்கில் கூட்டுறவு வாரவிழா கருத்தரங்கம் நடைபெறும். 19.11.2023 அன்று இளைஞர்கள், பெண்கள் விளிம்பு நிலை மக்களுக்கான கூட்டுறவு அமைப்புகள் என்ற பொருளில் நல்லான் பிள்ளைபெற்றாள் என்ற கிராமத்தில் இலவச கண்சிகிச்சை முகாம் நடைபெறும்

20.11.2023 அன்று கூட்டுறவு கல்வி மற்றும் பயிற்சியைச் சீரமைத்தல் என்ற பொருளில் நடைபெறும் கூட்டுறவு வாரவிழாவில் திருவண்ணாமலையில் திருவண்ணாமலை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்திலும், செய்யார் கிளை அலுவலக வளாகத்திலும் இலவச இரத்த தான முகாம்கள் நடைபெறும் என்பதை மண்டல இணைப்பதிவாளர் கோ.நடராஜன் அவர்கள் தெரிவித்தார்கள்.

Tags:    

Similar News